search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளியில்"

    • தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த என்.கந்தம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சியினை செய்து காண்பித்தனர்.

    பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

    • பூலாம்பாடி அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் கொடியேற்றினார்

    அரும்பாவூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சர்வதேச தொழிலதிபருமான டத்தோ பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது, நான் பயின்ற பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வந்தது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.என்னைப்போல இங்குள்ள பெரும்பாலானோர் பயின்றது இந்த பள்ளிதான்.பெற்றோரிடம் இருப்பதை விட ஆசிரியரிடமே அதிகநேரம் இருக்கிறோம்.நாங்கள் படிக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது என்பையன் நல்லா படிக்கனும் அடிச்சு சொல்லிக்கொடுங்க என்பார்கள்.ஆனால் இன்று அடித்தால் ஏன் என் பையனை அடித்தீர்கள் என பெற்றோர்கள் கேள்விகேட்கிறார்கள் அது பெற்றோர்கள் செய்யும் தவறு.இன்றைய காலக்கட்டத்தில் மரியாதை பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை சொல்லித்தருவது ஆசிரியர்கள் தான்.பெரம்பலூர் மாவட்டத்திலேயேசிறந்த பள்ளி என பூலாம்பாடி மேல்நிலைப்பள்ளி என்ற பெயர் எடுக்க வேண்டும்.அதற்கு என்னால் முடிந்ததை செய்து தருகிறேன்.மாணவர்கள் ஒவ்வொருவரும் சாதிக்ககூடியவர்கள் தான்.உங்களதுவாழ்க்கையை நீங்கள் முடிவுசெய்யனும்.இன்றைய காலத்தில் படிப்புதான் மிக முக்கியம்.படிப்பு இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது.இன்று நீங்கள் கஷ்டப்பட்டால் பின்னால் நன்றாக இருக்க முடியும்.என்னைப்போ லநீங்களும் இதே பள்ளியில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும்.என்னால் முடிந்தது உங்களாலேயும் முடியும்.மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்புநல்க வேண்டும்.மலேசியாவில் அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுவேலை.அதே போல் கூடிய சீக்கிரம் இந்தியாவிலேயும் வரும் என எதிர்பார்க்கிறேன்.அரசுபள்ளி ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்த்தாலே ஊரில் உள்ள அனைவரும் அவர்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்ப்பார்கள் என்றார்.

    முன்னதாக டத்தோ பிரகதீஸ்குமார் அவர்களுக்கு சாரண சாரணிய இயக்க மாணவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் தொழிலதிபர்கள் இசைபாலு, டிகேஎஸ் ரமேஸ், பள்ளிதலைமை ஆசிரியர் முருகேசன், உள்ளிட்ட ஆசிரியர்களும், பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி செங்குட்டுவன், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

      ஓமலூர்:

      சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டபெரியாம்பட்டி கிராமத்தில் உள்ள நச்சுவா யனூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு உள்ளது. இதில், தற்போது 50-க்கும் மேற் பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கிராம பொது நிலம் உள்ளது. இங்கு அம்மன் கோவிலும் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியை சுற்றிலும் கடந்த ஆறு மாதமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், கிராமத்தில் பெய்யும் மழைநீரும் கசிவுநீரும் வந்து இங்கே தொடர்ந்து தேங்கி நிற்கிறது.

      அங்கு மரங்கள் இருப்ப தால், மரத்தில் இருந்து உதிரும் இலைகள் தண்ணீ ரில் அழுகி அந்த பகுதி துர் நாற்றம் வீசுகிறது. மேலும், ஈக்கள் கொசுக்கள் தொல் லையும் அதிகரித்து காணப் படுகிறது. இதனால், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

      அதேபோல கிராமத்தின் பொது காரியங்கள், திரு விழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவையும் இந்த இடத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மருத்துவ முகாம் கள், கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற முடி யாமல் அங்கேயே தேங்கி நிற்பதால் கிராம மக்களும் அவதிப்படுகின்றனர்.

      மேலும், அங்குள்ள வாக்குச்சாவடி மைய பழைய கட்டிடம் மிகவும் பாதிப்ப டைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், சுவர்களும், ஓடுகளும் உடைந்து விழுந்து வருகிறது.அதனால், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், தண்ணீர் செல்லும் கால் வாய்களின் ஆக்கிரமிப்பு களை அகற்றி குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.
      • பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

      பு.புளியம்பட்டி:

      தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

      ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டது.

      இதை தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்கள் உற்சா கத்துடன் வகுப்பறைக்கு சென்றனர்.

      இதையொட்டி புளி யம்பட்டி, பனையம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.

      மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

      இதையடுத்து பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

      • 32 பள்ளிக்கூடங்களுக்கு தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
      • ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.

      மொடக்குறிச்சி:

      அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு, பள்ளிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

      இத்திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், சமுதாய தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், புரவலர்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடைகளை பெற்று பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பள்ளிக்கு தேவையான வசதிகளை இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

      இதனையடுத்து மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் சுமார் 32 பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அகன்ற தொடுதிரை ஸ்மார்ட் போர்டு, கணினி, மாணவர்கள் அமரும் நாற்காலிகள், மேசைகள், இரும்பு பீரோக்கள் போன்றவைகளை தனியார் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

      அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட நவீன தொடுதிரை கணினி மற்றும் மேசைகள், நாற்காலிகள் வழங்கியதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

      ஒவ்வொரு பள்ளிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கி உள்ளனர்.

      மொடக்குறிச்சி வட்டாரம் கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட நாத கவுண்டன் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டு பள்ளி ஆசிரியர் தாமஸ் மாணவ- மாணவிகளுக்கு வகுப்பு பாடங்களை கற்றுக்கொடுத்தார்.

      நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் கிடைத்த பொருட்களால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் பெற்றுள்ளது.

      • பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவ ர்களின் சேர்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
      • மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களை மாண வர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

      கிருஷ்ணகிரி, 

      கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

      கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இதில், கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

      மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிக ளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிட கட்டடம் கட்டி பல ஆண்டுகளாக திறக்க ப்படாமல் விஷப்பூச்சிகளின் கூடாரமாக உள்ளதால் மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      அதே போல், குடிநீர் தொட்டியும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மாணவர்களுக்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களும் அறையில் வைத்து பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வாங்க ப்பட்ட கம்யூட்டர்களை மாண வர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

      பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவ ர்களின் சேர்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலாவது மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்த ப்பட்டது. இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திம்பி, பள்ளி ஆசிரியர்கள் சிவகுமார், சகாய ஆரோக்கியராஜ், சத்தி, அமலா ஆரோக்கியமேரி, முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது
      • மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.

      புதுக்கோட்டை

      தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் 13 ஆயிரத்து 210 பள்ளிகளில் வானவில் மன்றத்தை கடந்த 28-ந்தேதி திருச்சியை அடுத்த காட்டூர் பாக்காக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

      இதையடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளுர் நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் தலைமையில் தொடங்கப்பட்டது.

      விழாவிற்கு வந்திருந்த மாணவர்களுக்கு வானவில் மன்றத்தின் நோக்கங்கள் செயல்பாடுகள், அறிவியல் சோதனை முறைகளைப் பற்றி அறிவியல் ஆசிரியை ஜெயஜோதி மணி விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.

      எட்டாம் வகுப்பு மாணவன் கலைவாணன் மினி மிக்ஸி செயல்படும் விதம் பற்றியும், ஆறாம் வகுப்பு மாணவி பிருந்தா முட்டையிலிருந்து அழுத்தத்திற்கான நோக்கத்தையும் தெளிவாக செய்து காட்டினார். விழாவில் ஆசிரியர்கள் சுவாமிநாதன், மனோஜ் குமார், நிலோபர் நிஷா, சங்கீதா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

      • அரசு பள்ளியில் கராத்தே, சிலம்பம் தொடக்க விழா நடந்தது
      • மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

      புதுக்கோட்டை:

      ஆலங்குடி சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாண வ, மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பக்கலை கற்றுகொடுப்ப தற்கான தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு, பேரூராட்சித்தலைவர் ராசி முருகானந்தம் தலைமை வகித்தார். நகர தி.மு.க. செயலாளர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் ஹாஜி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். இவ்விழாவில், பள்ளி தலைமையாசிரியர் சரோஜாதேவி, தி.மு.க. ஒன் றிய பிரதிநிதி இப்ராகிம், பேரூராட்சி கவுன்சிலர் லெட்சுமணன், துப் புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உட்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

      • அரசு பள்ளியில் உலக இருதய தின ஓவியப்போட்டி நடந்தது.
      • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

      கரூர்

      ஜெகதாபி ஊராட்சி துளசிகொடும்பு அரசு தொடக்க பள்ளியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை வனிதா தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஓவியம் வரைந்தனர். இதையடுத்து இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் உதவி ஆசிரியர் செல்வராணி முன்னிலையில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா பரிசுகளை வழங்கி பாராட்டினார்."

      • அரசு பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது.
      • முப்பெரும் விழாவாக நடந்தது.

      அரியலூர்:

      அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் ஆகிய 3 மன்றங்களின் தொடக்க விழா முப்பெரும் விழாவாக நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியை செல்வராணி வரவேற்றார். விழாவில் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாடகம் மற்றும் தொன்மை பாதுகாப்பு பற்றிய நாடகத்தை நடத்தினர். மேலும் புராதன சின்னங்கள், வரலாற்று ஆளுமைகள் மற்றும் வாக்காளர்களின் உரிமைகளும், கடமைகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் மாணவ, மாணவிகள் பேசினார்கள். முன்னதாக சமூக அறிவியல் ஆசிரியை தமிழ் இலக்கியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணித ஆசிரியர் செல்வமுருகன் மற்றும் ஆங்கில ஆசிரியை சத்தியப்பிரியா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ஆசிரியர் கலையரசன் நன்றி கூறினார்.

      • அரசு பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
      • மாணிக்கம் எம். எல். ஏ. பங்கேற்பு

      கரூர்:

      தமிழக அரசு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து, குளித்தலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

      நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மாணிக்கம், கோட்டாட்சியர் புஷ்பாதேவி, டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். டி எஸ் பி ஸ்ரீதர், கோட்டாட்சியர் புஷ்பாதேவி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்கள் என்னென்ன நிலைகளில் உள்ளது, பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினர்,

      நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசன், நகர திமுக பொருளாளர் தமிழரசன், அரசு வழக்கறிஞர் சாகுல்ஹமீது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

      குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் வந்த பெற்றோர்கள்.

      குமாரபாளையம்:

      கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கபட்டன. குமாரபாளையம் நகரில் மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன் பாளையம் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் அதன் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகளை இனிப்புகள், மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.

      மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் குவிந்தனர். இது பற்றி தலைமை ஆசிரியை கவுசல்யாமணி கூறியதாவது:

      எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி உள்ளது. இந்த பகுதி மட்டுமில்லாது, வெகு தொலைவில் உள்ள சானார்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், சிவசக்தி நகர், நாராயண நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள சொல்லி கேட்டு வருகின்றனர்.

      30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனும் வகையில்தான் அரசு ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறது. ஆனால் எங்கள் பள்ளியில் தற்போது 724 பேர் உள்ள நிலையில், எப்படி மேலும் மாணவர்களை சேர்த்துக் கொள்வது? அவ்வாறே சேர்த்தாலும் போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

      ×